வாரிசு படத்தில் குஷ்பு எங்கே எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தளபதியின் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற பெரும் நட்சத்திரப் பட்டாளத்தில் குஷ்புவும் இடம்பெற்றிருந்தார். ஆனால் படத்தில் அவரை காணவில்லை என ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். படம் மிக நீளமாக இருந்ததால் வாரிசு படத்தில் அவரது பகுதிகளை ட்ரிம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய வீடியோ நேர்காணலில் பேசிய குஷ்பு, வாரிசு படத்தில் தனது கதாபாத்திரம் என்ன என்பதை வெளிப்படுத்த முடியாது என்று கூறினார். படப்பிடிப்பில் விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முன்பே சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். சென்னையில் நடந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, குஷ்புவை பற்றி மேடையில் பேசிய விஜய், வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகக் கூறினார்.
Hi Friends.
Enaku oru doubt.#Varisu movie la Khushboo erukanganu sonnagale. 🤔🤔🤔#BlockBusterVarisu #VarisuPongalWinner@7screenstudio @Harish_NS149 @Karthikravivarm
— Joseph Jeeva (@jnajeeva) January 11, 2023
🤔 khushbu character is not in #Varisu
Is they deleted the scene or changed the mother character to Jayasudha @directorvamshi pic.twitter.com/mI0I4GPr6J
— 𝗦𝗵𝗿𝗲𝘆𝗶 (@NameIsShreyash) January 11, 2023
Illa enaku puriyala enaku mattum varisula Khushboo kanuku theriyalai ya illa yella rukkuma ? #Varisu
— pathukalam (@lavanku11) January 11, 2023
அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!
இப்போது, வாரிசு படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். சிலர் பிரபுவுக்கு ஜோடியாக அவர் இடம்பெற்றிருக்கலாம் என்கின்றனர். இன்னும் சிலர் குஷ்பு, ராஷ்மிகாவின் அம்மாவாக நடித்திருப்பார் என்கின்றனர். அதே நேரத்தில் விஜய்க்கு அம்மாவாக முன்பு குஷ்பு நடித்திருக்கலாம் என்றும், பிறகு அவரது கதாபாத்திரம் ஜெயசுதாவுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.