முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சிக்காக குஷ்பு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சிக்காக குஷ்பு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாரிசு படம்

வாரிசு படம்

குஷ்பு நடித்த காட்சிகள் உட்பட வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூத்த நடிகை குஷ்பு தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் நிலையில் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக அப்டேட் கொடுத்தார். அதோடு விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இருப்பினும், படம் வெளியானபோது குஷ்பு இடம்பெற்ற காட்சிகள் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல், ராஷ்மிகாவின் அம்மாவாக குஷ்பு நடித்ததாகவும், ஃபைனல் அவுட் புட்டில் அதிக நேரம் காரணமாக நீக்கப்பட்ட 17 நிமிட காட்சிகளில் அவரது காட்சி இருந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வாரிசு படத்திற்காக நடிகை குஷ்பு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குஷ்புவின் காட்சிகள் உட்பட வாரிசு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

தமன் இசையமைத்துள்ள 'வாரிசு' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை தாண்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Khushbu sundar, Varisu