முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: ''போலீஸ் நடவடிக்கை எடுங்க, இல்லனா....'' - வீடியோ பகிர்ந்து எச்சரித்த குஷ்பு

வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: ''போலீஸ் நடவடிக்கை எடுங்க, இல்லனா....'' - வீடியோ பகிர்ந்து எச்சரித்த குஷ்பு

குஷ்பு

குஷ்பு

அந்த வீடியோவில் உங்க ஊருக்கு போங்கடா என தமிழர் ஒருவர் வடமாநிலத்தவர்களை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காக அதிக அளவில் தமிழ்நாட்டுக்கு வரும் நிலையில் இந்த செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கும், அக்கல்லூரியின் கேண்டீனில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதலங்களில்  பரபரப்பாக பேசப்பட்டது.

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும் நம்மைப் போல தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவருக்கு அவருக்கு பதிலளிக்கும் விதமாக விஜய் டிவி புகழ் மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிறகு ஏன் விஜய் படத்தை வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள்? உழைக்கட்டும். ஆனால் ஆள நினைக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் டிரெய்னில வட மாநிலத்தவர்களை தமிழர் ஒருவர் தாக்கும் வீடியோவை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் உங்க ஊருக்கு போங்கடா என தமிழர் ஒருவர் வடமாநிலத்தவர்களை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, மொழி கர்வம் அரசியலையும், சமூக வலைதளங்களையும் ஆதிக்கம் செலுத்தும்போது இதுதான் நடக்கும். ஆதரவற்ற இவர்களை தாக்குவது வீரம். பிரதமர் மோடியை தவறாக பேசுகிறாரக்ள். தமிழ்நாடு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இது தேசிய அளவில் எதிரொலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Khushbu