திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள்தான் - சுந்தர்.சி பற்றி சீக்ரெட் வெளியிட்ட குஷ்பு

திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள்தான் - சுந்தர்.சி பற்றி சீக்ரெட் வெளியிட்ட குஷ்பு
குஷ்பு - சுந்தர்.சி
  • Share this:
தனது திருமண நாள் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

1995-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘முறைமாமன்’ திரைப்படத்தில் குஷ்பு நாயகியாக நடித்தபோது சுந்தர்.சியுடன் காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனது 20-வது ஆண்டு திருமண நாள் குறித்து ட்வீட் செய்துள்ள நடிகை குஷ்பு, “இந்த 20 ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை. இதுநாள் வரையில் நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். ஒரு புன்னகையுடன் அதை நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தன்னுடைய திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான். ஆனால் நீங்கள் அப்படித் தானே. என்னைத் தாங்கும் தூணுக்கு திருமண நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், இந்த 20 ஆண்டுகளில்... ஒவ்வொரு புயலையும், ஒவ்வொரு சூழலையும், நல்லது, கெட்டது, வெற்றி தோல்விகளையும் ஒன்றாய் நின்று அன்பும் பாசமும் நிறைந்த இல்லறத்தை உருவாக்கியுள்ளோம். நாம், நான், நீங்கள் எப்போதும் கடைசி வரையில் ஒன்றாய் இருக்கவே இணைந்துள்ளோம். வாழ்த்துகள் காதலே” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சுந்தர்.சி - குஷ்பு தம்பதிக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: நேர்மறை எண்ணம்... தொய்வில்லாத வேகம்... ரஜினியின் சாகசம் குறித்து வீடியோ வெளியிட்ட பியர் க்ரில்ஸ்!
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading