கே.ஜி.எஃப் 2 படத்தின் நடிகர் யஷ் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியானது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.
பிரபல டான்ஸ் மாஸ்டரின் குழந்தைகளுடன் அட்டகாசமாக நடனமாடிய விஜய்!
கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் யஷ், தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். கேஜிஎப் திரைப்படத்திற்காக தாடி மற்றும் நீண்ட முடியுடன் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக வலம் வந்த யஷ், தற்போது தனது தாடியை வெட்டும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.