Home /News /entertainment /

100 Days of KGF2 : ‘இது வெறும் ஆரம்பம்தான்’ – அடுத்த பாகத்தின் அப்டேட்டை கொடுத்த படக்குழு

100 Days of KGF2 : ‘இது வெறும் ஆரம்பம்தான்’ – அடுத்த பாகத்தின் அப்டேட்டை கொடுத்த படக்குழு

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

100 Days of KGF2 : படம் வெளியாகி 100 நாட்கள் அடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அடுத்த பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

    கே.ஜி.எஃப்- 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆக்சன் மற்றும் மாஸ் பட ரசிகர்களால் இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் 2 திரைப்படம், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    கேஜிஎஃப் 2 திரைப்படத்துடன் ஒரு நாளுக்கு முன்பாக வெளியான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கு கேஜிஎஃப் 2 முக்கிய காரணமாக அமைந்தது என சினிமா வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர்.

    ஆப் டெவலப்பராக விஜய்... எதிர்பார்ப்பை கிளப்பும் வாரிசு! 

    உச்ச நட்சத்திரத்தின் படத்தையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு, கேஜிஎஃப் 2 மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இதனை நிறைவு செய்யும் வகையில், படம் அமைந்ததால் ரசிகர்கள் திரும்பத் திரும்ப இந்த படத்தை பார்த்து கொண்டாடினர்.

    உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இந்திய சினிமாவில் பாகுபலி-2 மற்றும் தங்கல் படத்திற்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கேஜிஎஃப் 2 பெற்றிருக்கிறது.

    குழந்தை பிறந்த 1 மாதத்தில் ஷாக் கொடுத்த சூர்யா பட நடிகை!

    இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது 3ம் பாகத்திற்கு அறிமுக காட்சி இடம்பெற்றிருக்கும். இதனால் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

    இந்நிலையில் படம் வெளியாகி 100 நாட்கள் அடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



    இதன் கடைசியில் This is Just a Begining அதாவது இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் என்று கூறி அடுத்த பாகம் வெளிவரவிருப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளார்கள். கேஜிஎஃப் படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: KGF 2

    அடுத்த செய்தி