• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Rajinikanth, Vijay, Ajith - அடுத்தடுத்து வெளியாகும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள்!

Rajinikanth, Vijay, Ajith - அடுத்தடுத்து வெளியாகும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள்!

விஜய், ரஜினிகாந்த், அஜித்

விஜய், ரஜினிகாந்த், அஜித்

பொங்கலுக்கு ரஜினியின் பேட்டயும், அஜித்தின் விஸ்வாசமும் வெளியாகி இரண்டும் ஹிட்டானது. அந்த நம்பிக்கையில் அண்ணாத்தயுடன் வலிமையை களம் இறக்குகிறார்கள்.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வர ஆரம்பித்திருக்கும் நிலையில், திரையரங்குகள் பல மாநிலங்களில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விரைவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படலாம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் ஏற்கனவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. திரைத்துறையினர்தான் படங்களை வெளியிடாமல் உள்ளனர். ஒரு பெரிய திரைப்படத்துக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட எதிர்பார்ப்புக்குரிய 6 திரைப்படங்களின் வெளியீட்டு திட்டங்களை பார்ப்போம்.

    1. கேஜிஎஃப் : சேப்டர் 2 - செப்டம்பர் 9

    பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான கன்னடப் படம் கேஜிஎஃப் : சேப்டர் 1 தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது. அதன் இரண்டாம் பாகத்துக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இரண்டாம் பாகம் வெளியாகிறது. திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருப்பவர்கள், செப்டம்பர் 9 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    2. ஆர்ஆர்ஆர் - செப்டம்பர் 13

    ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 13 வெளியாகிறது. மேக்கிங் வீடியோவுடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தப் படமும் கேஜிஎஃப் போன்று தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. ஆங்கிலம் உள்ளிட்ட பல அயல் மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர்.

    3. அண்ணாத்த - நவம்பர் 4

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 வெளியாகிறது. இதனை சன் பிக்சர்ஸ் ஏற்கனவே உறுதி செய்துள்ளதால் பட வெளியீட்டில் மாறுதல் வர வாய்ப்பில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    4. வலிமை - நவம்பர் 4

    வலிமை படத்தின் முக்கிய காட்சியை படமாக்க விரைவில் படக்குழு வெளிநாடு செல்கிறது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும். அண்ணாத்த போன்று வலிமையும் தீபாவளியை குறி வைக்கிறது. தீபாவளி வெளியீடு என்பது கிட்டத்தட்ட உறுதியானதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் பேட்டயும், அஜித்தின் விஸ்வாசமும் வெளியாகி இரண்டும் ஹிட்டானது. அந்த நம்பிக்கையில் அண்ணாத்தயுடன் வலிமையை களம் இறக்குகிறார்கள்.

    5. சூர்யா 40 - டிசம்பர்

    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தை டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன் முக்கிய ஷெட்யூல்ட் மூன்று தினங்கள் முன்பு தொடங்கியது. இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். கிராமத்துப் பின்னணியில் அமைந்த இந்த ஆக்ஷன் படம் டிசம்பர் இறுதியில் வெளிவரலாம்.

    6. பீஸ்ட் - 2021 பொங்கல்

    விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் பீஸ்டை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ஆக்ஷன் படமான இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்தாலும், அடுத்த வருடம் ஜனவரியில் பொங்கல் வெளியீடாக பீஸ்டை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: