முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...

கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...

கே.ஜி.எஃப். 3 வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப். 3 வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்போது கே.ஜி.எஃப். 3 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும், எப்போது படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கே.ஜி.எஃப். 3 படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் கே.ஜி.எஃப். ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2018ம் ஆண்டு இறுதியில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற ரசிகர்களை முழு திருப்தி அடையச் செய்தது, இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இதுநாள் வரையில் வெளிவந்த சிறந்த டான் படங்களில் ஒன்றாக கேஜிஎஃப் படம் கொண்டாடப்பட்டது.

படத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான தொடக்கம் குறித்த காட்சி இடம் பெற்றதால் பார்ட் 2 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இதற்கிடையே, கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு 2021 ஜூலை மற்றும் 2022 ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கடைசியாக 2021 ஏப்ரல் 13-ம்தேதி வெளியிடப்பட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் : விஜய்யின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் இவர்தானா?

படம் வெளியாகி 30 வது நாளை இன்று எட்டியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இன்றளவும் கேஜிஎஃப் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் ரூ. 1,200 கோடி வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது.

படத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க - அடேங்கப்பா... சிம்பு அணிந்த கோட் விலை இத்தனை லட்சமா!

இதனால் எப்போது கே.ஜி.எஃப். 3 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும், எப்போது படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் நேர்காணல் ஒன்றில், அக்டோபர் மாதத்திற்கு பின்னர் கே.ஜி.எஃப் 3 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்றும் 2024-ல் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: KGF, KGF 2