ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KGF இயக்குனரின் அடுத்தப் படம்.. மிரட்டும் பிரித்விராஜ் லுக்!

KGF இயக்குனரின் அடுத்தப் படம்.. மிரட்டும் பிரித்விராஜ் லுக்!

சலார் படத்தில் பிரித்விராஜ்

சலார் படத்தில் பிரித்விராஜ்

மூக்கு, காதுகளில் வளையங்களும், கழுத்தில் புதுவிதமான ஆபரணமும் அணிந்து மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ் காட்சியளிக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த படத்தில், இடம்பெற்றுள்ள பிரித்விராஜின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

  கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார். கே.ஜி. எஃப் படத்தின் இரண்டாம் பாகம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

  இந்த படத்தின் மூன்றாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே பிரபாஸை வைத்து பிரசாந்த் நீல் ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வரும் சலாரில் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

  மூவி டைம் :'கெஸ் பண்ணமுடியாத கிளைமேக்ஸ்’ சீட் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் டைம் லூப் சினிமா!

  கே.ஜி.எஃப் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதேபோன்று படத்திற்கு இசை ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு புவன் கவுடா, கலை சிவகுமார், ஸ்டன்ட் அன்பறிவு, எடிட்டிங் உஜ்வால் குல்கர்னி என கேஜிஃஎப் படங்களுக்கு பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் சலார் படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

  இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ் மற்றும் ஜெகதி பாபு கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் பிரித்விராஜின் பிறந்தநாளையொட்டி சலார் படத்தில் அவருடைய கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் பிரித்விராஜ் இடம்பெற்றுள்ளார்.

  மூக்கு, காதுகளில் வளையங்களும், கழுத்தில் புதுவிதமான ஆபரணமும் அணிந்து மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ் காட்சியளிக்கிறார்.

  தீபாவளி ரிலீஸ்! தொடங்கியது புக்கிங்! சர்தார்,பிரின்ஸ் படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

  அவரது முகத்தில் இடம்பெற்றுள்ள தழும்புகள் அவரை இன்னும் டேஞ்சரான ஆளாக காட்டுகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: KGF, KGF 2, Kollywood