Home /News /entertainment /

கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்

கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்

நடிகர் மோகன் ஜுனேஜா

நடிகர் மோகன் ஜுனேஜா

கே.ஜி.எஃப். இரண்டு பாகங்களிலும் இடம்பெற்ற மோகன் ஜுனேஜா மரணம் அடைந்த நிகழ்வு கே.ஜி.எஃப். ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார். இதையொட்டி ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

54 வயதான மோகன் ஜுனேஜா நீண்ட  நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.

மோகனின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் மோகன் நடித்துள்ளார். இருப்பினும், கே.ஜி.எஃப். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதையும் படிங்க - எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான 'கடமையை செய்' ட்ரெய்லர் ரிலீஸ்... சிம்பு வெளியிட்டார்... 

கே.ஜி.எஃப். கதையை விவரிக்கும் ஆனந்த் இளவழகனிடம் தகவல் அளிக்கும், இன்ஃபார்மராக நாகராஜு என்ற கேரக்டரில் மோகன் ஜுனேஜா நடித்திருப்பார். ‘கேங்க கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்… ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்' என அவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தது.

இதையும் படிங்க.. 2 குழந்தைகளுக்கு அம்மா.. அதே இளமை தோற்றம்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் குடும்பம்

கே.ஜி.எஃப். இரண்டு பாகங்களிலும் இடம்பெற்ற மோகன் ஜுனேஜா மரணம் அடைந்த நிகழ்வு கே.ஜி.எஃப். ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.





கன்னட திரைத்துறையை சேர்ந்த மோகன், தும்கூரு மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன. இதில் திரைத்துறையினர் பலர் கலந்து கொள்கிறார்கள்.
Published by:Musthak
First published:

அடுத்த செய்தி