Home /News /entertainment /

விக்ரம் படத்தை பாராட்டிய கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல்…

விக்ரம் படத்தை பாராட்டிய கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல்…

இயக்குனர் பிரசாந்த் நீல்

இயக்குனர் பிரசாந்த் நீல்

Prashant Neel on Vikram : ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த வெள்ளியன்று முதல் விக்ரம் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும், வரவேற்பு காரணமாக தமிழகத்தின் முக்கிய திரையரங்குகளில் இன்னமும் விக்ரம் திரையிடப்படுகிறது.

    கமல் நடித்துள்ள விக்ரம் படத்தை கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

    இந்தாண்டில் வெளியான மெகா ஹிட் படங்களில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் படம் ரூ. 1200 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கேஜிஎஃப் படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக கே.ஜி.எஃப். 2 படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனை மிஞ்சும் வகையில் படம் அமைந்ததால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

    இந்நிலையில் விக்ரம் படத்தை பார்த்து விட்டு கே.ஜி.எஃப். 2 இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

    12 வருடங்களுக்கு பிறகு உங்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி அண்ணா - உதயநிதி குறித்து சிம்பு வெளியிட்ட ட்வீட்! 

    ஒட்டுமொத்த விக்ரம் படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கமல்ஹாசன் சார், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாக பார்ப்பது என்பது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்து.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உழைப்பு எப்போது என்னை ஈர்த்து விடுகிறது. அனிருத் ஒரு ராக் ஸ்டாரைப் போல விக்ரம் படத்தில் பணியாற்றியுள்ளார். அன்பறிவு சண்டை இயக்குனர் மாஸ்டர்களின் பணியைப் பார்த்து பெருமைப்படுகிறேன். ரோலக்ஸ் கேரக்டர் சூர்யாவை மறக்க முடியாது. அவரது நடிப்பு நெருப்பாக இருந்தது.



    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் படம் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க - நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா!

    ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த வெள்ளியன்று முதல் விக்ரம் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும், தமிழகத்தின் முக்கிய திரையரங்குகளில் இன்னமும் விக்ரம் திரையிடப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Vikram

    அடுத்த செய்தி