ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கே.ஜி.எப் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

கே.ஜி.எப் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

கிருஷ்ணா ராவ்

கிருஷ்ணா ராவ்

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா ஜி ராவ் என்ற முதியவர் ஒருவர் கண் பார்வை தெரியாமல் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா இன்று காலமானார்.

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை செய்த படமாக மாறியது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியானது. இதிலும் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, இதையும் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார்.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா ஜி ராவ் என்ற முதியவர் ஒருவர் கண் பார்வை தெரியாமல் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் "உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்" என்று பேசுவார். இந்த டயலாக் தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

தற்போது அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சில நாட்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: