ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடேங்கப்பா! ரூ.3000 கோடியை முதலீடு செய்யும் 'கேஜிஎஃப்' பட நிறுவனம்!

அடேங்கப்பா! ரூ.3000 கோடியை முதலீடு செய்யும் 'கேஜிஎஃப்' பட நிறுவனம்!

காந்தாரா - கேஜிஎஃப்

காந்தாரா - கேஜிஎஃப்

இறுதி சுற்று, சூரரைப் போற்று போன்ற கவனம் ஈர்த்த படங்களைக் கொடுத்துவந்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தையும் ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப்-2 ஆகிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்தன் மூலம் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களும் திரையரங்கு வியாபாரத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. அதேபோல் குறைவான பொருட்செலவில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' படத்தையும் ஹோம்பலே நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படமும் இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

தற்போது கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் தற்போது ஹீரோவாக நடித்துவரும் சலார் படத்தை ஹோம்பலே நிறுவனம் தயாரித்துவருகிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க, ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். தற்போது இந்தப் படம் தயாரிப்பில் இருந்துவருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் உருவாகும் ரகு தாத்தா படத்தையும் இந்நிறுனம் தயாரித்துவருகிறது. அறிமுக இயக்குநர் சுமன் குமார் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.

மேலும் இறுதி சுற்று, சூரரைப் போற்று போன்ற கவனம் ஈர்த்த படங்களைக் கொடுத்துவந்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தையும் ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியானது. இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் நன்றியும் தெரிவித்துள்ளது. மேலும் சினிமா துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதனால் தென்னிந்திய சினிமாவில் மேலும் பல பிரம்மாண்ட படங்கள் தயாராக வாய்ப்பு உருவாகியுள்ளது

First published:

Tags: KGF 2, Movies