ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KGF 2 இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்த நாள்… பாகுபலி பிரபாஸ், யாஷ் பங்கேற்பு

KGF 2 இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்த நாள்… பாகுபலி பிரபாஸ், யாஷ் பங்கேற்பு

பிரசாந்த் நீல், பிரபாஸ், யாஷ், விஜய் கிரகந்தூர்

பிரசாந்த் நீல், பிரபாஸ், யாஷ், விஜய் கிரகந்தூர்

Prashanth Neel : ராஜமவுலிக்கு பிறகு இன்றைய தேதியில் மிகப்பெரும் கமர்ஷியல் இயக்குனராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேஜிஎஃப் 2 படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பாகுபலி பிரபாஸ், யாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த 3வது படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎஃப் 2 திரைப்படம் உள்ளது. இதன் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு காரணமாக இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் வரலாறு காணாத அளவில் மெகா ஹிட்டானது. இந்தியா மட்டும் இல்லாமல் அமெரிக்கா, கனடா, யுஏஇ மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கேஜிஎஃப் 2 நல்ல கலெக்சனை ஏற்படுத்தியது.

Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை 

படத்தில் இடம்பெற்ற டயலாக்குகள் அதிக எண்ணிக்கையில் ட்ரெண்ட் ஆகின. ஃபேஸ்புக் மீம்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ், ட்விட்டர் ட்ரெண்டிங் என படம் வெளியாகி சுமார் 3 வாரங்களுக்கு எங்கு பார்த்தாலும் கேஜிஎஃப் 2தான் ஆதிக்கம் செலுத்தியது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். இவரது பிரமாண்டமான மேக்கிங், திரைக் கதையில் இருந்த நேர்த்தி, ரசிகர்களுக்கு கதை சொல்லுவதில் இருந்த சுவாரசியம் ஆகியவற்றால் கேஜிஎஃப் 2 திரைப்படம் பெருவாரியான சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தியது.

Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை 

ராஜமவுலிக்கு பிறகு இன்றைய தேதியில் மிகப்பெரும் கமர்ஷியல் இயக்குனராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதில் கேஜிஎஃப் ராக்கி பாய் யாஷ், பாகுபலி புகழ் பிரபாஸ், கேஜிஎஃப் படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்தின் தலைவர் விஜய் கிரகந்தூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இதனை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு சலார் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: KGF 2