விஷ்ணு விஷாலின் FIR பட ட்ரெய்லரை பாராட்டிய கே ஜி எஃப் இயக்குனர்!
விஷ்ணு விஷாலின் FIR பட ட்ரெய்லரை பாராட்டிய கே ஜி எஃப் இயக்குனர்!
FIR
FIR: முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் என முக்கியமான திரைப்படங்களை சத்தமில்லாமல் தந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் FIR. படம் வெளிவரும் முன்பே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான எஃப்ஐஆரின் ட்ரெய்லரை கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார்.
முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் என முக்கியமான திரைப்படங்களை சத்தமில்லாமல் தந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் FIR. படம் வெளிவரும் முன்பே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. கேரளாவில் E4 என்டர்டைன்மென்ட் படத்தை வெளியிடுகிறது. இதேபோல் தெலுங்கு, கன்னட உரிமைகளும் ஹாட் கேக்காக விற்பனையாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதனைப் பார்த்த கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், 'கிரேட் ட்ரெய்லர்! மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்' என இணையத்தில் பாராட்டியுள்ளார். அதற்கு விஷ்ணு விஷால் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அபுபக்கர் அப்துல்லா என்ற வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். முஸ்லிமான இவர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக படத்தில் வருகிறார். இவரை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்துள்ளார். இவருக்கும் நாராயணனுக்கும் படத்தில் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது.
மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் நடித்துள்ளனர். அஸ்வத் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிப்ரவரி 11 தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் FIR வெளியாகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.