ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எஃப். – 2 படத்தில் ட்ரெய்லர் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ் ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார்.
யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். 2 படம் உருவாகியுள்ளது. 2018-ல் வெளியான இதன் முதல்பாகம், மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டை படக்குழுவினர் தள்ளிவைத்தனர்.
ஏப்ரல் 14-ம் தேதி கே.ஜி.எஃப். 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.40 மணியளவில் படத்தின் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளுக்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜும், கன்னடாவில் நடிகர் சிவராஜ்குமாரும், தெலுங்கில் ராம்சரணும், இந்தியில் ஃபர்கான் அக்தரும் வெளியிட்டுள்ளனர்.
2 நிமிடங்கள் 57 வினாடிகள் ஓடும் ட்ரெய்லர் அல்ட்ரா வைரலாக மாறியுள்ளது. பார்ட் ஒன்னில் கருடன் மட்டுமே முக்கிய வில்லனாக இருந்த நிலையில், பார்ட் டூவில் டஜன் கணக்கில் வில்லன்கள் இருப்பதால் ராக்கி பாய் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.