தமிழகத்தில் சுமார் 300 திரையரங்குகள் உள்பட உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் இன்று வெளியாகிறது. பெரும்பாலான இடங்களில் வரவேற்பு காரணமாக அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மும்பை, கேரளாவின் சில பகுதிகளில் நள்ளிரவு காட்சிகளாக கே.ஜி.எஃப். 2 வெளியிடப்பட்டுள்ளது.
யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க - கலவை விமர்சனம்... கே.ஜி.எஃப் 2 வெளியீட்டால் பீஸ்ட் வசூல் பாதிக்குமா?
இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் வெளியீடு காரணமாக தமிழகத்தில் உள்ள சுமார் 1000 திரையங்குகளில் 250-ல் மட்டுமே கே.ஜி.எஃப். 2 வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - KGF Chapter 2 : 3-வது பாடல் வெளியீடு : அடுத்த லெவலுக்கு சென்ற எதிர்பார்ப்பு...
வட இந்திய மாநிலங்களில் 4400-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், தென்னிந்தியாவில் 2600-க்கும், வெளிநாடுகளில் இந்தி மொழியில் 1100, தென்னிந்திய மொழிகளில் 2900 என 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் கே.ஜி.எஃப். 2 வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை தவிர்த்து, முதன்முறையாக கே.ஜி.எஃப். 2-ம் பாகத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக விஜய் ரசிகர்களையே படம் திருப்திபடுத்தாத சூழல் காணப்படுகிறது. முதல் நாள் ட்ரெண்ட் இப்படி இருந்தாலும், லேட் பிக் அப் ஆகுவதற்கும் வாய்ப்புள்ளதாக சினிமா வல்லுனர்கள் தெரிவித்துள்ளன.
பீஸ்ட் அளித்த ஏமாற்றத்தால், கே.ஜி.எஃப்.2 படத்திற்கான தியேட்டர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.