கேஜிஎஃப் 2 ரிலீஸ் எப்போது?... இதோ பதில்

சஞ்சய் தத் அதிரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் அக்டோபரில் படமாக்கப்படவுள்ளன

news18
Updated: July 31, 2019, 11:30 AM IST
கேஜிஎஃப் 2 ரிலீஸ் எப்போது?... இதோ பதில்
கேஜிஎஃப்
news18
Updated: July 31, 2019, 11:30 AM IST
கேஜிஎஃப் 2 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்து 2020-ம் ஆண்டு சம்மரில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எஃப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்தப் படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவில் முதல் 100 கோடி வசூல் என்று அசத்தி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.


தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. 2-ம் கட்ட படப்பிடிப்பு முடிந்து 3-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பெங்களூருவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 23-ம் தேதி ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற உள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. சஞ்சய் தத் அதிரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை படக்குழு அறிவித்தது. இந்த செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சிறப்பான செய்தியாக அமைந்தது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது



Loading...

படப்பிடிப்புகள் அனைத்தும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்து படம் 2020-ம் ஆண்டு சம்மரில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

Also watch

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...