Home /News /entertainment /

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் கே.ஜி.எஃப். 2

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் கே.ஜி.எஃப். 2

கே.ஜி.எஃப். 2 திரையிடும் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப். 2 திரையிடும் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பீஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட திரைகள் குறைந்து வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் கே.ஜி.எஃப். 2 படத்தின் வசூல் ரூ. 100 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு போட்டி கொடுக்கும் வகையில் பெரிய படங்கள் ஏதும் களத்தில் இல்லாததால், கே.ஜி.எஃப். 2 திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை தமிழகத்தில் எளிதாக தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14-ம்தேதி கே.ஜி.எஃப்.2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் டைட்டில் கார்டு முதல் என்டு கிரெடிட்ஸ் வரையில் மாஸ்ஸாகவும், பிரமாண்டமாகவும் காட்சிகளை உருவாக்கியிருந்தனர்.

எந்த இடத்திலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவுக்கு, தரமான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி படம் அமைந்திருந்தது.

இதையும் படிங்க - இடைதரகர் சுகேஷிடமிருந்து பரிசு பெற்ற புகாரில் பிரபல நடிகையின் ரூ.7.27 கோடி சொத்துகள் முடக்கம்!

குறிப்பாக இளைஞர்களை கே.ஜி.எஃப். 2 திரைப்படம் அதிகம் ஈர்த்தது. ரிப்பீட் ஆடியன்ஸால் வசூல் வேட்டை உலகம் முழுவதும் சிறப்பாக அமைந்த நிலையில் உலகம் முழுவதுமான வசூல் ரூ. 1,100 கோடியை கே.ஜி.எஃப். 2 தாண்டியுள்ளது.

இதையும் படிங்க - 13 ஆண்டுகள் காத்திருப்பு... பிரமாண்டத்தின் உச்சம்... அவதார் 2 : சிறப்பு பார்வை

தமிழ்நாட்டில் 18 நாட்களை கடந்துள்ள கே.ஜி.எஃப். 2 திரைப்படம் ரூ. 93 கோடி வசூலை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - 'ரசிகர்களை என்றுமே சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை' - அஜித் ; வைரலாகும் பிறந்தாள் பதிவு

தமிழகத்தை பொருத்தளவில் 3 முறை வார இறுதி நாட்களை கே.ஜி.எஃப். 2 திரையிட்ட தியேட்டர்கள் எதிர்கொண்டன. இவற்றில் பெரும்பாலும் காட்சிகள் ஹவுஸ்புல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பீஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட திரைகள் குறைந்து வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் அதிமான தமிழக தியேட்டர்களில் கே.ஜி.எஃப். 2 ஓடிக் கொண்டிருக்கிறது.

கமர்ஷியல் படம் என்கிற அடிப்படையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் அடுத்தவாரம் திரைக்கு வருகிறது. இதனால் கே.ஜி.எஃப். திரைப்படம் வசூலில் புதிய உச்சத்தை எட்டும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Published by:Musthak
First published:

Tags: KGF 2

அடுத்த செய்தி