உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள கே.ஜி.எஃப். 2 திரைப்படம் தற்போது ரூ. 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலை நோக்கி படம் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய வசூலின் முடிவின்படி, கே.ஜி.எஃப். ரூ. 1000 கோடியை கடந்துள்ளது. ஏற்கனவே, பாகுபலி 2, தங்கல், ஆர்.ஆர்.ஆர். ஆகிய 3 படங்கள் மட்டுமே ரூ. 1000 கோடி வசூலை தாண்டியிருந்த நிலையில், இந்த பட்டியல் கே.ஜி.எஃப் 2 தற்போது இணைந்துள்ளது.
தமிழகத்தில் 350-க்கும் அதிகமான திரையரங்குகளில் கே.ஜி.எஃப். 2 ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், இங்கு மட்டும் ரூ. 95 கோடி வசூலை தாண்டி விட்டதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப். 2 மேக்கிங் வீடியோ ரிலீஸ்... ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் கேமரா டீம்
யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14-ம்தேதி கே.ஜி.எஃப்.2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்தின் டைட்டில் கார்டு முதல் என்டு கிரெடிட்ஸ் வரையில் மாஸ்ஸாகவும், பிரமாண்டமாகவும் காட்சிகளை உருவாக்கியிருந்தனர். எந்த இடத்திலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவுக்கு, தரமான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி படம் அமைந்திருந்தது.
குறிப்பாக இளைஞர்களை கே.ஜி.எஃப். 2 திரைப்படம் அதிகம் ஈர்த்தது. ரிப்பீட் ஆடியன்ஸால் வசூல் வேட்டை உலகம் முழுவதும் சிறப்பாக அமைந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி ரூ. 1000 கோடி வசூலை படம் தாண்டியுள்ளது.
தமிழகத்தை பொருத்தளவில் பீஸ்ட் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களை கே.ஜி.எஃப். டேக் ஓவர் செய்து வருகிறது. இதற்கு போட்டியாக காத்துவாக்குல 2 காதல் படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் கே.ஜி.எஃப். பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - 'ரசிகர்களை என்றுமே சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை' - அஜித் ; வைரலாகும் பிறந்தாள் பதிவு
இந்தியாவில் அதிகம் வசூலித்த படங்களில் அமீர் கானின் தங்கல் முதலிடத்திலும், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 இரண்டாம் இடத்திலும், ஆர்.ஆர்.ஆர். 3ம் இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தை கே.ஜி.எஃப். 2 பிடித்துள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு படம் ஓடினால் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு கே.ஜி.எஃப். 2-க்கு உள்ளதாக சினிமா வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.