கே.ஜி.எஃப். சாப்டர் 2 படத்தின் மேக்கிங் வீடியோ பார்ட் 1-யை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. படத்தில் கேமரா டீமின் வேலை வியப்பூட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கே.ஜி.எஃப். முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால் படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்தப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.
படத்தில் ஆர்ட், கேமரா, எடிட்டிங், இசை என ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ததால், படத்தின் அவுட்புட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் சினிமா ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது 350க்கும் அதிமான திரைகளில் கே.ஜி.எஃப். 2 படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிட்டு வருகிறது. முதல் எபிசோட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப். 2 மேக்கிங் வீடியோ
இதில் கேமரா டிபார்ட்மென்ட்டின் பணிகள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவாளர் புவன் கவுடா மற்றும் அவரது உதவியாளர்கள் படப்பிடிப்பு குறித்த சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க - பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் கல்வி குறித்த பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் - நடிகை ஓவியா
கேஜிஎஃப் 2 படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பை தொடர்ந்து கே.ஜி.எஃப் 3 மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க - திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது பிசாசு 2 டீசர்.. ஆண்ட்ரியா மிரட்டல்
இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இதன்பின்னர் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர் கே.ஜி.எஃப். 3 படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.