குடும்பங்கள் கொண்டாடும் என்று விளம்பரம் செய்தால் கேலி பேசுகிறார்கள். தோல்வி அடைந்த படங்களை தூக்கி நிறுத்த, குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று விளம்பரம் செய்வதாக 2கே கிட்ஸ் கிண்டலடிக்கிறார்கள். சினிமா சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் குடும்ப ஆடியன்சின் வேல்யூ அவர்களுக்கு தெரிய வரும்.
ஆண்பாவம், கரகாட்டக்காரன், சின்னதம்பி, சூரியவம்சம், நாட்டாமை, வானத்தப்போல, சந்திரமுகி என கடந்தகால பிளாக்பஸ்டர்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடியவை. பெண்களும், குழந்தைகளும் திரையரங்குகளுக்கு வந்தால் மட்டுமே ஒரு படத்தால் பத்து நாள்களுக்கு மேல் வசூலை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்தப் படங்களே வசூல் சாதனையும் செய்யும்.
கேஜிஎஃப் சேப்டர் 2 பாக்ஸ் ஆபிஸில் சுனாமியாக நுழைந்தது. இதன் இந்திப் பதிப்பு இரண்டு தினங்களில் 100 கோடிகள், 4 தினங்களில் 150 கோடிகள், 5 தினங்களில் 200 கோடிகள், 6 வது நாளில் 225 கோடிகள், 7 வது நாளில் 250 கோடிகள் என பாகுபலி 2 படத்தைவிட வேகமாக வசூலித்து சாதனைப் படைத்தது. பாகுபலி 2 படத்தின் இந்திப் பதிப்பு மொத்தம் 511 கோடிகளை வசூலித்தது. கேஜிஎப் சேப்டர் 2 வசூலிக்கும் வேகத்தை வைத்து கணித்தால் 600 கோடிகளை அது எட்ட வேண்டும். ஆனால், ட்ரேட் அனலிஸ்டுகள் பாகுபலி 2 படத்தின் வசூலை கேஜிஎப் சேப்டர் 2 எட்டுவது சந்தேகம் என்கிறார்கள். என்ன காரணம்?
பாகுபலி 2 படத்துக்கு பெண்கள், குழந்தைகள் என குடும்ப ஆடியன்ஸ் பெருமளவில் வந்தனர். இரண்டு வாரங்களுக்கு மேல் திரையரங்கில் அந்தப் படத்தை நிலைநிறுத்தியது இவர்கள்தான். ஆனால், கேஜிஎப் சேப்டர் 2 படத்தை அதிகமும் இளைஞர்களே பார்க்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால், இந்த வார இறுதிக்குப் பிறகு கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் வசூல் கணிசமாகக் குறையும், அடுத்த வார இறுதிக்குப் பிறகு கிட்டத்தட்ட முழுவதும் வடிந்துவிடும் என கணித்திருக்கிறார்கள். பேமிலி ஆடியன்ஸ் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளனர்.
சமந்தாவின் பாய் பிரெண்டாக ஸ்ரீசாந்த்... ட்ரெண்டிங்கில் திப்பம் தப்பம் பாடல்!

இந்தி சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படங்கள்...
10. தூம் 3 - 284.27 கோடிகள்
09. சுல்தான் - 300.45 கோடிகள்
08. பத்மாவதி - 302.15 கோடிகள்
07. வார் - 317.91 கோடிகள்.
06. பஜ்ரங்கி பைஜான் - 320.34 கோடிகள்
05. டைகர் ஜிந்தா ஹே - 339.16 கோடிகள்
04. பிகே - 340.8 கோடிகள்
03. சஞ்சு - 342.53 கோடிகள்
02. தங்கல் - 387.38 கோடிகள்
01. பாகுபலி 2 - 511 கோடிகள்
படப்பிடிப்புக்கு போகும் வழியில் விபத்து... பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளுக்கு ஏற்பட்ட சோகம்
இந்தி டப்பிங் படமான பாகுபலி 2 முதலிடத்தில் உள்ளது. இதன் அருகில் கூட எந்த நேரடி இந்திப் படமும் இல்லை. ஓபனிங்கில் கேஜிஎப் சேப்டர் 2 காட்டிய வேகத்துக்கு பாகுபலி 2-வை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை என்கிறார்கள். தற்போது கேஜிஎப் சேப்டர் 2 எட்டு தினங்களில் 268.63 கோடிகள் வசூலுடன் 13 வது இடத்தில் உள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்தால் எளிதாக 10 வது இடத்துக்கு முன்னேறிவிடும். ஆனால், முதலிடத்தைப் பிடிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள். காரணம் பேமிலி அடியன்ஸ் குறைவாக இருப்பது. குடும்பங்கள் கொண்டாடும் என்று ஏன் போடுகிறார்கள் என்பது 2 கே கிட்ஸ்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.