Home /News /entertainment /

கே.ஜி.எஃப் சாப்டர் 2 : 4-வது பாடலாக ‘மான்ஸ்டர்’ ரிலீஸ்… ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

கே.ஜி.எஃப் சாப்டர் 2 : 4-வது பாடலாக ‘மான்ஸ்டர்’ ரிலீஸ்… ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சிக்கு பின்னர் ஒலிக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றது.

கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சிக்கு பின்னர் ஒலிக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றது.

கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சிக்கு பின்னர் ஒலிக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றது.

கே.ஜி.எஃப். சாப்டர் 2 படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியான நிலையில் க்ளைமேக்ஸில் தெறிக்கவிட்ட மான்ஸ்டர் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படத்திலிருந்து முக்கியமான காட்சியும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 14-ம்தேதி உலகம் முழுவதும் வெளியான கேஜிஎஃப் 2, வசூலை வாரிக் குவித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ. 800 கோடி வசூலை இந்த படம் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்புதான் பார்ட் டூவின் வெற்றிக்கு முக்கிய காரணம். போதாக்குறைக்கு, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம், ஏமாற்றம் அளித்ததால் சினிமா ரசிகர்கள் கே.ஜி.எஃப் 2 பக்கம் திரும்பினர். படத்தை பாராட்டாத நபர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பாசிடிவான ரிவ்யூக்களை கேஜிஎஃப் 2 குவித்துள்ளது.

இதையும் படிங்க - அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பி.வி.சிந்து... இன்ஸ்டாவைக் கலக்கிய வீடியோ


படத்திலிருந்து தூஃபான், சுல்தானா, அகிலம் நீ என இதுவரை 3 பாடல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளிலும் இந்த பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருந்தன.


இதையும் படிங்க - K.G.F: Chapter 2 ராக்கி பாயின் அம்மா தமிழ் சீரியல் நடிகையாம்! உங்களுக்கு தெரியுமா?

இந்நிலையில் படத்திலிருந்து கடைசிப் பாடலாக மான்ஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கேஜிஎஃப் 2 கிளைமேக்ஸ் காட்சிக்கு பின்னர் ஒலிக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு எடுத்துச் சென்றது. படத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சி ஒன்றை இந்த பாடலில் இணைத்துள்ளார்கள். இடையிடையே, தியேட்டர்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் இந்த பாடலின் இணைத்து ரசிக்க வைத்துள்ளனர்.



இன்று மதியம் 3.30-க்கு வெளியான இந்த பாடல் லைக்குகளையும், கமென்ட்டுகளையும் குவித்து வருகிறது. இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: KGF 2

அடுத்த செய்தி