கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து 3வது பாடலாக 'தீரா சுல்தானா' வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது. மெலடி மாஸ் ஜேனரில் வெளியான இந்தப் பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.
லிரிக் வீடியோவை பார்க்கும் போது, ராக்கி பாய் கே.ஜி.எஃப்.-ன் ராஜாவாக மகுடம் சூடும் போது இந்தப் பாடம் இடம் பெறும் என யூகிக்கலாம்.
5 மொழிகளில் வெளியாகியுள்ள தீரா சுல்தானா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கன்னட மொழியில் இந்தப் பாடலை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் எழுதியுள்ளார். ஏற்கனவே கே.ஜி.எஃப். முதல் பாகத்தில் இடம்பெற்ற தீரா பாடல் பெரும் வரவேற்பை பெற்றியிருந்தது.
இதையும் படிங்க - Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!
அந்த பாடலின் பின்னணி இசையை டச் செய்து, மாஸாக தீரா சுல்தானா பாடலை ரவி பஸ்ரூர் கம்போஸ் செய்திருக்கிறார். பாடலை கேட்டவுடனேயே எனர்ஜி ஏறுவதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.
இதையும் படிங்க - கலவை விமர்சனங்களைப் பெறும் பீஸ்ட்... விஜய் ரசிகர்களுக்கான படம் மட்டும்தானா?
முன்னதாக கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து வெளியான தூஃபான் மற்றும் 'அகிலம் நீ'அம்மா சென்டிமென்ட் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சினிமா ரசிகர்களின் பார்வை நாளை வெளியாகும் கே.ஜி.எஃப். 2 பக்கம் திரும்பியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.