கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீஸான நாளை விட தற்போது வசூலை வாரிக்குவித்து வருகிறது. பீஸ்ட் படம் ஏமாற்றம் அளித்ததால், ராக்கி பாய்க்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 14-ம்தேதி வெளியாகும் என கே.ஜி.எஃப். ரிலீஸ் குறித்து சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில், அதனுடன் விஜய்யின் பீஸ்ட் போட்டியிடும் என தகவல்கள் பரவின. கடைசியாக போட்டியை தவிர்த்து ஒரு நாளைக்கு முன்பாக அதாவது ஏப்ரல் 13-ம் தேதி பீஸ்ட் தமிழ்நாட்டில் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
மறுநாள் கே.ஜி.எஃப். சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்விரு படங்கள் வெளியான ஒரே நாளில், அதன் மீதான விமர்சனங்கள் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப் சாப்டர் 2 : 4-வது பாடலாக ‘மான்ஸ்டர்’ ரிலீஸ்… ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்
இதைத் தொடர்ந்து, கடந்த 16, 17 தேதிகளிலேயே கே.ஜி.எஃப். படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டன. மறுநாள் திங்கள் முதல், பல முக்கிய தியேட்டர்களில் மெய்ன் ஸ்க்ரீனில் கே.ஜி.எஃப். 2 திரையிடப்பட்டது.
சர்வதேச அளவில் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்றதால், சினிமா ரசிகர்கள் கே.ஜி.எஃப் 2 படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினர். ரிப்பீட் ஆடியன்ஸால் இந்த படத்தின் வசூலும் அதிகரித்தது. குறிப்பாக சென்னையில் சில திரையரங்குகளில் 10 நாட்களுக்கும் மேலாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன.
இதையும் படிங்க - KRK Trailer: ஐ லவ் யூ டூ, ஐ மேரி டூ... காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்!
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், கே.ஜி.எஃப். 2 படத்தின் தமிழக விநியோகஸ்தருமான எஸ்.ஆர்.பிரபு, ரிலீஸான நாளை காட்டிலும் 10 வது நாளில் அதாவது நேற்று அதிக வசூலை குவித்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தளவில் கே.ஜி.எஃப். 2, ரூ. 60 கோடி வசூலை தாண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாளை மதியத்திற்குள் தமிழ்நாட்டில் கேஜிஎஃப் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த விபரங்கள் தெரியவரும். தமிழகத்தில் அடுத்ததாக மாஸ் ஹீரோவின் எந்தப் படமும் தற்போதைக்கு ரிலீஸ் இல்லை. இதனால் ராக்கி பாயின் ஆட்டம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.