Home /News /entertainment /

KGF 2: ஃபேன் மேட் முதல் பான் இந்தியன் படம் வரை - 19 வயது கே.ஜி.எஃப் 2 எடிட்டருக்கு குவியும் பாராட்டுகள்!

KGF 2: ஃபேன் மேட் முதல் பான் இந்தியன் படம் வரை - 19 வயது கே.ஜி.எஃப் 2 எடிட்டருக்கு குவியும் பாராட்டுகள்!

உஜ்வல் குல்கர்னி

உஜ்வல் குல்கர்னி

கே.ஜி.எஃப் 2 படத்தில் வேலை செய்ய தொடங்கும் போது உஜ்வல் குல்கர்னிக்கு வயது வெறும் 17 தான். இப்போது 19 வயதாகியிருக்கிறது.

    கே.ஜி.எஃப் 2 படத்தின் எடிட்டர் 19 வயதேயான உஜ்வல் குல்கர்னி என்பது தான் தற்போதைய இணைய வைரல்.

    நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியானது.

    கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.

    முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!

    நேற்று வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் வெகுவாக கொண்டாடி வரும் வேளையில், படத்தில் எடிட்டராக பணிபுரிந்த உஜ்வல் குல்கர்னி பற்றி தான் தற்போது ஊரெல்லாம் பேச்சு. என்ன காரணம் என்கிறீர்களா? யூடியூப் வீடியோக்கள் மற்றும் கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் ஃபேன் மேட் ட்ரைலரை எடிட் செய்ததைப் பார்த்து வியந்த இயக்குநர் பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப் 2 படத்தில் ட்ரைலரை கட் செய்யும் பணியை வழங்கியிருக்கிறார். அதையும் பிரமாதமாக செய்து முத்திருக்கிறார் உஜ்வல் குல்கர்னி. பின்னர் கே.ஜி.எஃப் 2 படம் முழுவதையும் எடிட் செய்யும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த். தற்போது படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும், உஜ்வல் குல்கர்னிக்கு பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

    உங்கள் வீட்டு பெண்களுக்கும் மார்பகங்கள் உண்டு - உள்ளாடை அளவு குறித்து கேட்டவருக்கு பிரியா பவானி சங்கர் பதில்

    கே.ஜி.எஃப் 2 படத்தில் வேலை செய்ய தொடங்கும் போது உஜ்வல் குல்கர்னிக்கு வயது வெறும் 17 தான். இப்போது 19 வயதாகியிருக்கிறது. இவ்வளவு சின்ன வயதிலேயே ஒரு பான் இந்தியன் படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு குறித்து, அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டது குறித்தும் ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: KGF 2

    அடுத்த செய்தி