ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KGF க்கு முன்பே சென்னையை கலக்கிய கமலின் கன்னடப் படம்!

KGF க்கு முன்பே சென்னையை கலக்கிய கமலின் கன்னடப் படம்!

கே.ஜி.எப்

கே.ஜி.எப்

KGF chapter: விஜய் வெறுப்பாளர்கள் கேஜிஎஃப்க்கு ஆதரவாக இணையத்தில் முழங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கேஜிஎஃப் சேப்டர் 1 தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது. கர்நாடகாவுக்கு வெளியே அதிக வசூலைப் பெற்றதும் இந்தப் படம்தான். முக்கியமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிகம் வசூலித்த கன்னடப் படம் என்ற சாதனையை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் சேப்டர் 2 ஏப்ரல் 14 வெளியாகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவனத்தில் வைத்து பான் - இந்தியா திரைப்படங்கள் தயாராகின்றன. இந்தப் படங்களில் அடிப்படையாக இருப்பது சண்டைக் காட்சிகள் எனப்படும் வன்முறை காட்சிகள். இதில் மத உணர்வை கொஞ்சம் கலந்து இந்தியா முழுவதிலும் வசூல் அறுவடை செய்வது அதிகரித்துள்ளது. சமீபத்திய உதாரணம் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர். அதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் சேப்டர் 2 வெளிவருகிறது. இது முழுக்க வன்முறைக் காட்சிகளை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 13 வெளியாகவிருக்கும் நிலையில் விஜய் வெறுப்பாளர்கள் கேஜிஎஃப்க்கு ஆதரவாக இணையத்தில் முழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சண்டைக்குள் புக வேண்டாம். கன்னட படமொன்று தமிழகத்தில் வரேவற்பை பெறுவது இதுதான் முதல்முறை என பலர் எழுதியும், பேசியும் வருகின்றனர். ஆனால், சுமார் 45 வருடங்களுக்கு முன்னால், 1977 லேயே கமல் நடித்த கன்னடப் படம் ஒன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 140 நாள்கள் ஓடியிருக்கிறது. அந்தப் படம் பாலுமகேந்திராவின் முதல் படமான கோகிலா.

இலங்கைத் தமிழரான பாலுமகேந்திரா புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து மலையாளத்தில் நெல்லு படத்தின் மூலம் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ச்சியாக அவருக்கு படங்கள் கிடைத்தன. இலங்கையில் மாணவராக பாலுமகேந்திரா இருக்கையில் டேவிட் லீனின், பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வைய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதனை வேடிக்கைப் பார்த்த பாலுமகேந்திரா என்ற சிறுவனுக்கு, டைரக்டர் குரல் கொடுத்ததும் மழை பெய்வதும், நடிகர்கள் நடிக்க ஆரம்பிப்பதும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

#AK61 Update – அஜித்தின் அடுத்த படத்தின் கதை இப்படித்தான் இருக்குமா?

அப்போதே இயக்குனராக வேண்டும் என்று உள்ளத்தில் வரித்துக் கொண்டார். புனேயில் அவர் படிக்க வந்ததும் இயக்குனர் துறையில்தான். அதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்த்த பேராசிரியர், அவரை ஒளிப்பதிவு துறையில் படிக்க உற்சாகப்படுத்த, பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கான வகுப்பில் சேர்ந்தார். ஆனால், இயக்குனராக வேண்டும் என்ற கனவு எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.

சுமார் 20 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவிட்டு அவர் கன்னடத்தில் தனது முதல் படம் கோகிலாவை இயக்கினார். குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ஷோபாவை இதில் நாயகியாக்கினார். கமல் படத்தின் நாயகன். இன்னொரு நாயகியாக ரோஜா மணி. நாயகனின் தோழன் கதாபாத்திரத்தில் மோகனை அறிமுகப்படுத்தினார்.

கோகிலா படத்தின் கதை அந்தக்  காலத்தில் பெரிதும் வியந்து பேசப்பட்டது. 1978 இல் கமல் நடிப்பில் பாலசந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது படத்தின் கதையை போன்றதுதான் இதுவும். கோகிலா (ஷோபா) ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி. அம்மா நோயாளி. அப்பா வேலை நிமித்தமாக ஊர் ஊராக அலைகிறவர். அவர்கள் வீட்டு வேலைக்காரி ரோஜா மணி. வீட்டின் ஒரே ஆண்கனும் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால் ஒரு பேயிங் கெஸ்டை வீட்டில் தங்க வைக்க முடிவு செய்கிறார்கள். வங்கியில் வேலை பார்க்கும் கமல் பேயிங் கெஸ்டாக வருகிறார்.

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #AK61… போஸ்டர்களை உருவாக்கி ரசிகர்கள் உற்சாகம்

ஷோபாவுக்கும் அவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த நேரம் வீட்டில் யாருமில்லாத நேரம்  கமலும், வேலைக்காரியான ரோஜா மணியும் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அந்த ஒரு நிகழ்வோடு கமல் அதனை மறந்து விடுகிறார். பிறகொருநாள் ரோஜா மணி கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து திடீரென ஒருநாள் கமலும், ரோஜா மணியும் காணாமல் போகிறார்கள். ஷோபா பல இடங்களில் அவர்களை தேடுகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை.பல வருடங்களுக்குப் பிறகு மருத்துவராக ஒரு கிராமத்துக்கு ஷோபா செல்கிறார். அங்கு கமலும், ரோஜா மணியும் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதையும், அவர்களுக்கு கோகிலா என்ற குழந்தை இருப்பதையும் ஷோபா தெரிந்து கொள்கிறார்.

உறவுச் சிக்கல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கோகிலா கன்னடத்தில் பம்பர் ஹிட்டானது. இதில் நாயகனாக நடித்த கமலும், எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கிய பாலுமகேந்திராவும் தமிழர்கள். நாயகி ஷோபா மலையாளி. இன்னொரு நாயகி ரோஜா மணி தெலுங்கர். நண்பனாக நடித்த மோகன் கன்னடர். இசையமைத்த சலீல் சௌத்ரி வங்காளி. கமல் இந்தப் படத்துக்கு அவரே டப்பிங் பேசியிருந்தார். மோகன் அறிமுகமான முதல் படம் இது. அப்போது அவர் பி.வி.கரந்தின் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தார்.

கோகிலாவில் வரும் பாஸ்கர் கதாபாத்திரத்துக்கு புதுமுகம் தேடிக் கொண்டிருந்த பாலுமகேந்திரா மோகனை அதில் நடிக்க வைத்தார்.

கோகிலா தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் கன்னடத்திலேயே சென்னையில் வெளியாகி 140 நாள்களை கடந்து ஓடியது. கன்னடப் படம் ஒன்று தமிழகத்தில் 100 நாள்கள் ஓடியது அதற்கு முன்பும் இல்லை, அதற்கு பின்பும் இல்லை. கோகிலா படைத்த அந்த சாதனை முழுக்க கமலையும், பாலுமகேந்திராவையுமே சாரும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sreeja
First published:

Tags: Beast, Kamal Haasan, KGF, KGF 2, Kollywood, Tamil Cinema