கன்னட நடிகர் யாஷின் அரசியல் எண்ட்ரி குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பரவி வரும் நிலையில், அது குறித்த உண்மையை இங்கே குறிப்பிடுகிறோம்.
KGF படத்திற்குப் பிறகு பல மடங்கு புகழ் பெற்ற கன்னட நடிகர் யாஷ், சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷை பெங்களூருவில் சந்தித்தார். பெங்களூரு தாஜ் வெஸ்டினில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இருவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, யாஷின் அரசியல் பிரவேசம் குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இருப்பினும், நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது வெறும் ஊகம் தான் என அதை மறுத்துள்ளனர்.
இதில் எந்த உண்மையும் இல்லை என்றும், இது ஒரு சாதாரண சந்திப்பு தான் எனவும் அரசியலுக்கும் இந்த சந்திப்புக்கும் தொடர்பில்லை என்றும் யாஷுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தவிர, யாஷ் தனது சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களை KGF படத்துக்காக அர்ப்பணித்தார். KGF 3 பற்றி கூறிய அவர், "எங்களிடம் ஒரு பிளான் உள்ளது, ஆனால் விரைவில் செய்யும் எண்ணம் இல்லை. இப்போது நான் வேறு ஏதாவது செய்ய விரும்புகிறேன். 6-7 வருடங்களாக, நான் KGF படத்தில் வேலை செய்தேன். எனவே, எல்லாம் சரியானால், KGF 3 படத்தை பிறகு உருவாக்குவோம்" என்றார்.
#KGF fame Rocking Star Yash with Nara Lokesh 💥 pic.twitter.com/o3l1wwpg7w
— Vijaykumar Mallela (@VijaykumarMall7) December 15, 2022
நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு
இதற்கிடையே யாஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.