ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை

இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை

இப்போது வாட்டசாட்டமான உடல், பளபளக்கும் சருமம், டிரிம் செய்யப்பட்ட தாடி, இதுவே ஹீரோக்களுக்கான ஹேண்ட்சம் லுக்காக மாறிவிட்டது. தென்னிந்திய திரைப்படங்களில் தாடி வைக்காமல் நடிக்கும் ஹீரோக்களின் படத்தை ஈஸியாக விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இப்போது ரஜினி, கமல் , சியான் விக்ரம், சத்யராஜ் என சீனியர்களில் ஆரம்பித்து விஜய், அஜித், சிம்பு, தனுஷ் வரை விதவிதமான தாடி கெட்டப்புக்களில் நடித்து வருகின்றனர். இப்போது எல்லாம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வேண்டும் என்றால் தாடி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. டோலிவுட் டூ கோலிவுட் வரை தற்போது தாடியுடன் வலம் வரும் இளம் ஹீரோக்கள் பற்றிய ஒரு ரவுண்ட் அப்பை பார்க்கலாம்...

கேஜிஎஃப் 2 வெற்றிக்கு பின்னர் யாஷை சோஷியல் மீடியாவில் பின்பற்றுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை கேஜிஎஃப் ஹீரோ யாஷ் பெற்றுள்ளார். இந்த அளவுக்கு எந்த கன்னட நடிகரும் ஃபாலோயர்ஸை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ல் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் கேஜிஎஃப் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முதல் பாகத்தில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டதால், பார்ட் டூ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

கடந்த மாதம் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் மெகாஹிட்டாகி, ரூ. 1200 கோடி வசூலை தாண்டியுள்ளது.

படத்தின் வெற்றிக்கு நாயகன் யாஷ் ஓர் முக்கிய காரணமாக இருக்கிறார். அவரை தவிர்த்து மற்ற யாரையும் ராக்கி பாய் கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, அவரது நடிப்பு படத்தில் உள்ளது.

இதையும் படிங்க - விக்ரமுடன் வாணி போஜன்... மகான் படத்தில் மிஸ் ஆன காட்சிகள்!

தற்போது கேஜிஎஃப் 3 வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரம் கேஜிஎஃப் 2 வெற்றிக்கு பின்னர் யாஷை சோஷியல் மீடியாவில் பின்பற்றுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
 
View this post on Instagram

A post shared by Yash (@thenameisyash)அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் யாஷை பின் தொடர்வோர் எண்ணிக்கை 10 மில்லியன், அதாவது ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இதேபோன்று பேஸ்புக்கில் 8.6 மில்லியன்பேரும், ட்விட்டரில், 1.1 மில்லியன்பேரும் யாஷை பின் தொடர்கின்றனர். ஒட்டுமொத்தமாக அவரை சமூக வலைதளங்களில் பின்பற்றும் ஐடிக்களின் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்குகிறது.

இதையும் படிங்க - Nenjukku Needhi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!

இந்த அளவுக்கு எந்தவொரு கன்ன நடிகருக்கும் சோசியல் மீடியாவில் ஃபாலோயர்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Musthak
First published:

Tags: KGF, KGF 2