Home /News /entertainment /

KGF 3: கே.ஜி.எஃப் முதல் இரண்டு பாகமும் மாபெரும் வெற்றி... அடுத்த பாகத்தின் வேலைகள் தொடக்கம்!

KGF 3: கே.ஜி.எஃப் முதல் இரண்டு பாகமும் மாபெரும் வெற்றி... அடுத்த பாகத்தின் வேலைகள் தொடக்கம்!

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

இரண்டாம் பாகத்தின் இறுதியிலேயே மூன்றாம் பாகம் குறித்து சொல்லப்பட்ட நிலையில், தற்போது கே.ஜி.எஃப் படங்களின் தயாரிப்பாளர் இதனை உறுதி செய்திருக்கிறார்.

    கே.ஜி.எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு சமீபத்தில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது.

    கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.



    கருடன் எனும் வில்லன் கதாபாத்திரம் இறந்ததற்கு பிறகு கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டிகளையும், அதன் பின் கதையின் நாயகன் யாஷ் நடத்தும் அதிரடிகளையும் அடிப்படையாகக் கொண்டு கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியாகியது. இரண்டாம் பாகத்தின் இறுதியிலேயே மூன்றாம் பாகம் குறித்து சொல்லப்பட்ட நிலையில், தற்போது கே.ஜி.எஃப் படங்களின் தயாரிப்பாளர் இதனை உறுதி செய்திருக்கிறார்.

    முதல் பாகத்தை விட கூடுதல் பிரமாண்டம்... கொண்டாடும் ரசிகர்கள்!

    கன்னட செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் கார்த்திக் கெளடா, கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான முதற்கட்ட வேலைகளை தொடங்கி விட்டதாகவும், விரைவில் அதில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கே.ஜி.எஃப் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப் படத்தின் அடுத்த பாகம் வெளியாக குறைந்தது 8 வருடங்களாவது ஆகும் எனக் கூறியிருந்தார். ஆனால் தற்போது தயாரிப்பாளர் அதன் முதற்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனால் கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது திரைக்கு வரும் என்பதை அறிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: KGF, KGF 2

    அடுத்த செய்தி