Home /News /entertainment /

KGF 2 Review: இந்திய உணர்வில் ஒரு சர்வதேச படம்!

KGF 2 Review: இந்திய உணர்வில் ஒரு சர்வதேச படம்!

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

  ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கே.ஜி.எஃப் 2 இன்று உலகம் முழுவதும் 10000 திரைகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பதிவிடுகிறோம்.

  நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியுள்ளது.

  கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

  Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!

  படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.  மைண்ட் ப்ளோயிங்! மிகுந்த ஆர்வத்துடன் உழைத்த ஒட்டுமொத்த குழுவினரின் உறுதியையும் கடின உழைப்பையும் திரையில் பார்த்தேன்! தகுதியான மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

  சென்னையில் ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பீஸ்ட் டிக்கெட் பரிசளித்த ஐ.டி நிறுவனம்!  யாஷ் மாஸ். சஞ்சய் தத் கேரக்டர் பலவீனம். அருமையான டயலாக்குகள். முழு படமும் பிடிக்கும். ஹீரோ ஸ்லோ மோஷனில் நடப்பது, கனமான பிஜிஎம், பஞ்ச் டயலாக், துப்பாக்கிச் சுடுதல் என 3 மணிநேரத்திற்கு அதையே மீண்டும் காட்டும் பில்டப்புகள். பிரமாண்ட மேக்கிங், பின்னணி இசை நன்று, ஆனால் சத்தமாக இருந்தது. க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது. ஸ்டைல் மட்டுமே, பொருள் இல்லை. சராசரி!  தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்யும் திறன் கொண்டது.  விவரிக்க வேறு வார்த்தைகள் இல்லை. இப்படி ஒரு சினிமா அனுபவத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. யாஷ் உண்மையில் ராக்கிங்.  இரண்டாம் பாதி ஃபயர். இந்திய உணர்வுகளுடன் சர்வதேச தயாரிப்பு. யாஷ் KGF3 படத்தில் சர்வதேசத்திற்கு செல்ல தயாராகிவிட்டார்! பிரசாந்த் நீலின் அருமையான விஷயங்கள், பாக்ஸ் ஆபிஸ் பதிவுகள் மீண்டும் எழுதப்பட வேண்டும்.  தீ. இறுதியான ஆக்‌ஷன் களியாட்டம், நமக்கு வியப்பைக் கொடுக்கிறது. காவியமான இரண்டாம் பாதி. மொத்தத்தில் ஒரு மாஸ் சிகரம். பெரிய திரையில் பார்க்க வேண்டிய ஒரு பிரமாண்ட அனுபவம். யாஷ் வெறியாட்டம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: KGF 2

  அடுத்த செய்தி