ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடியில் கே.ஜி.எஃப். 2 ரிலீஸாகும் தேதி அறிவிப்பு… ட்விட்டர் பதிவு வைரல்

ஓடிடியில் கே.ஜி.எஃப். 2 ரிலீஸாகும் தேதி அறிவிப்பு… ட்விட்டர் பதிவு வைரல்

கேஜிஎஃப் 2 படத்தில் ஹீரோ யாஷ்.

கேஜிஎஃப் 2 படத்தில் ஹீரோ யாஷ்.

KGF 2 on OTT : கே.ஜி.எஃப். 2 திரைப்படத்தை கோலிவுட், பாலிவுட் என ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரே பாராட்டி இருந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமேசான் ஓடிடி தளத்தில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கேஜிஎஃப் திரைப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை விட பன்மடங்கு திருப்தியை கே.ஜி.எஃப். 2 திரைப்படம் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ. 1300 கோடியை தாண்டி இந்தப் படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 14ம்தேதி வெளியான கே.ஜி.எஃப். 2 திரைப்படம் சரியாக 50 நாட்களுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க - 117 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதன்படி ஜூன் மாதம் 3ம்தேதி அமேசான் ஓடிடி தளத்தில் கே.ஜி.எஃப். 2 வெளியாகும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான சோஷியல் மீடியா பதிவுகள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கே.ஜி.எஃப். 2 திரைப்படத்தை கோலிவுட், பாலிவுட் என ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரே பாராட்டி இருந்தனர். இந்த படத்தின் க்ளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க - சூர்யா - பாலா படத்தின் பெயர் இதுவா? கோலிவுட்டில் வைரலாகும் தகவல்

இதற்கிடையே படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாசுடன் சலார் மற்றும் ஜூனியர் என்டிஆருடன் ஒரு படம் என 2 படங்களில் தற்போது கமிட்டாகி உள்ளார். கேஜிஎஃப் ஹீரோ யாஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்.

கே.ஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிக பிரமாண்டமான படம் என்பதால் இதற்கு இணையாக அல்லது அதை விட பிரமாண்டமான படத்தில்தான் யாஷ் கமிட் ஆகுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் கேஜிஎஃப் 2 திரைப்படம் சுமார் ரூ. 130 கோடியை விட அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  ஓடிடியில் கேஜிஎஃப் 2 வெளியாகும் அதே நாளில்தான் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Published by:Musthak
First published:

Tags: KGF 2