இன்று வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.
கடந்த மாதம் 14-ம்தேதி வெளியான கே.ஜி.எஃப்.2 திரைப்படம் 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ. 1,175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
குறிப்பாக இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் செய்துள்ளது. கே.ஜி.எஃப். 3 படமும் அடுத்து வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
படத்தின் டைட்டில் கார்டு முதல் என்டு கிரெடிட்ஸ் வரையில் மாஸ்ஸாகவும், பிரமாண்டமாகவும் காட்சிகளை உருவாக்கியிருந்தனர். எந்த இடத்திலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவுக்கு, தரமான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி படம் அமைந்திருந்தது.
இதையும் படிங்க - நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’
குறிப்பாக ரிப்பீட் ஆடியன்ஸை அதிக எண்ணிக்கையில் கே.ஜி.எஃப் 2 படம் உருவாக்கியது. படத்தை ஒரு முறை பார்த்தவர்கள் ஈர்க்கப்பட்டு மீண்டும் மீண்டும் பார்க்கத் தொடங்கியதால் எதிர்பாராத வசூலை படம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க - கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!
கே.ஜி.எஃப். 3 படம் உருவாகும் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஹாலிவுட்டுக்கு சவால் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டது. கே.ஜி.எஃப் 3 அதற்கும் மேலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கலை மற்றும் ஒளிப்பதிவு டிபார்ட்மென்ட்டில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியான நிலையில் இந்த வீடியோ டைரக்டர் டிபார்ட்மென்ட்டை விவரிக்கிறது. இதனை ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் லைக், ஷேர் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.