கே.ஜி.எஃப். 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் அந்த படத்துடன் போட்டியிடாமல் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ஜெர்ஸி படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப். முதல்பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2வது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. அதற்கேற்ற வகையில் படத்திலிருந்து வெளியான டீசர், 2 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை எதிர்பார்ப்பை குறையவிடாமல் செய்துள்ளன. இந்தி மொழி பேசும் மாநிலங்களிலும் கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு பெரும் வரவேற்பு இருந்ததால் சாப்டர் 2- பல ரிக்கார்டுகளை முறியடிக்கும் என்று சினிமா வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க - Beast : ரிலீஸிற்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் பீஸ்ட்..
இந்நிலையில், இந்தி முன்னணி நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ஜெர்ஸி திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 14-ம்தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் இந்தியாவே எதிர்பார்க்கும் கே.ஜி.எஃப். பார்ட் டூ வெளியாகவுள்ளதால், ஜெர்ஸி படக்குழுவினர் வெளியீட்டை அடுத்த வாரத்திற்கு அதாவது ஏப்ரல் 22-ம்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க - அடி அழகா சிரிச்ச முகமே! நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார்கள். இதில் ஷாகித் கபூர், நடிகை மிருனல் தாகூர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர். திறமையுள்ள கிரிக்கெட் வீரருக்கு ஏற்படும் தடைகளும், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதாம் படத்தின் கதைக் களம். ஏற்கனவே இதேபோன்ற ஜேனரில் வெளிவந்த 83 திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த சூழலில் கேஜிஎஃப் உடன் போட்டியிட்டால் அது நிச்சயம் வசூலை பாதிக்கும் என்பதை உணர்ந்து, ஜெர்ஸி படக்குழு வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.