கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திரைக்கு வராமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த கேஜிஎப் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பாகுபலிக்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் பிரமாண்ட திரைப்படமாக கேஜிஎப் 2 எதிர்பார்ப்பை கிளப்பியது
தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டது.
சென்னையில் ஒருசில திரையரங்கில் சிறப்பு காட்சியாக 4 மணி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கேஜிஎஃப் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் மாஸாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
Must Read : கலவை விமர்சனம்... கே.ஜி.எஃப் 2 வெளியீட்டால் பீஸ்ட் வசூல் பாதிக்குமா?
அதேபோல் கேஜிஎப் 3 வருவதற்கான கதைக்களம் அமைந்திருப்பதாகவும் கட்டாயம் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக கேஜிஎஃப் அமைந்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர்.
வட இந்திய மாநிலங்களில் 4400-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், தென்னிந்தியாவில் 2600-க்கும், வெளிநாடுகளில் இந்தி மொழியில் 1100, தென்னிந்திய மொழிகளில் 2900 என 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் கே.ஜி.எஃப். 2 வெளிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.