KGF 2 Collection Worldwide: கே.ஜி.எப் 2 திரைப்படம் 6 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு சமீபத்தில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, கே.ஜி.எஃப் 2 படத்தின் இந்தி பதிப்பு பாக்ஸ் ஆபிஸில் 219.56 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியில் வெளியான 6-வது நாளில் 19-21 கோடிகளை வசூலித்துள்ளது. சமீபத்திய வசூலுடன், அதன் மொத்த வசூல் இப்போது 238.56-240.56 கோடியாக உள்ளது.
கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்
யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று, அதன் ஒட்டுமொத்த உலகளாவிய வசூலாக ரூபாய் 625 கோடிகளைப் பெற்றுள்ளது. அதாவது ஏற்கனவே அதிக வசூல் செய்த டாப்-10 இந்திய படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR படத்திற்குப் பிறகு, இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் படம் கே.ஜி.எஃப் 2 தான்.
பத்மாவத், சஞ்சு மற்றும் சுல்தான் ஆகியப் படங்களின் வசூலை இது மிஞ்சியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.