யுஎஸ் பாக்ஸ் ஆபிஸின் டாப் 10-க்குள் கேஜிஎப் நுழைந்திருக்கிறது. பாகுபலி 2 இந்திப் பதிப்பின் சாதனையை உடைத்திருக்கிறது. இதே வேகத்தில் போனால் இந்திய சினிமாவின் அனைத்து சாதனைகளையும் பிரசாந்த் நீலின் படம் நொறுக்கும் சாத்தியமுள்ளது.
வெளியான நாளில் இருந்து கேஜிஎஃப் சேப்டர் 2 பட்டையை கிளப்பி வருகிறது. கேரளாவில் 80 க்கும் அதிகமான திரையரங்குகளில் நேற்று ஞாயிறு நள்ளிரவுக் காட்சி திரையிட்டுள்ளனர். கேரள சினிமா வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கேரளாவில் 23 கோடிகளை வசூலித்தது. இதனை முதல் நான்கு தினங்களில் கேஜிஎப் சேப்டர் 2 கடந்துவிடும் என்கின்றன கேரளாவிலிருந்து வரும் தகவல்கள். ராஜமௌலி படத்தின் வாழ்நாள் வசூலை நான்கே நாளில் இந்தப் படம் சிதறடித்திருக்கிறது.
நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரூ.200 கோடி வசூலை கடந்த பீஸ்ட்?
தமிழகத்தில் விஜய்யின் பீஸ்ட் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் கேஜிஎஃப் சேப்டர் 2 ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் முழுமையான வசூலை பெறவில்லை. பீஸ்ட் படத்தை ஒரு வாரமாவது ஓட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் கேஜிஎப் சேப்டர் 2 க்கு அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. அடுத்த திங்கள் முதல் இந்தப் படத்துக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன.
சென்னையில் ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த வசூலை பீஸ்ட், கேஜிஎப் சேப்டர் 2 இரண்டும் கடந்துள்ளன. இப்படியே போனால் பீஸ்டையும் இந்தப் படம் தாண்டிச் செல்லும். ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களிலும் கேஜிஎப் சேப்டர் 2 நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆர்ஆர்ஆர் வசூல் சாதனையை தெலுங்கு மாநிலங்களில் முறியடிக்குமா என்பது சந்தேகமே.
மோடியை புகழ்ந்த இளையராஜா... திராவிடன் எனப் பெருமைப்படும் யுவன்... எதிரெதிர் துருவத்தில் அப்பா-மகன்?
இந்தியில் கேஜிஎப் சேப்டர் 2 முதல் நாளில் 53.95 கோடிகளை வசூலித்து, முதல்நாள் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது நாள் சனிக்கிழமை 42.90 கோடிகளை வசூலித்தது. மூன்றாவது நாள் ஞாயிறு 50.35 கோடிகளை வசூலித்து முதல் மூன்று தினங்களில் 193.99 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நான்காவது நாளான இன்று இப்படம் 200 கோடிகளை தாண்டும். ராஜமௌலியின் பாகுபலி 2 200 கோடிகளை எட்ட 6 தினங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் கேஜிஎப் சேப்டர் 2 நான்கு தினங்களிலேயே அதனை எட்டி சாதனைப் படைத்துள்ளது.
யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎப் சேப்டர் 2 முதல் மூன்று தினங்களில் 2.9 மில்லியன் டாலர்களுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆர்ஆர்ஆர் முதல்வார இறுதியில் 7 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 3 வது இடத்தைப் பிடித்திருந்தது. ஒப்பீட்டளவில் கன்னடப் படங்களுக்கு தெலுங்குப் படங்களைவிட மிகக்குறைவான பார்வையாளர்களே யுஎஸ்ஸில் உள்ளனர். கன்னடப் படமொன்று யுஎஸ்ஸில் 1 மில்லியன் டாலர்களை கடப்பது இதுவே முதல்முறை. அந்தவகையில் மூன்று தினங்களில் 2.9 மில்லியன் டாலர்கள் வசூலித்து கேஜிஎப் சேப்டர் 2 யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருப்பது மிகப்பெரிய சாதனை.
இந்தியில் பாகுபலி 2 படம் மட்டுமே 500 கோடிகளை இந்தியாவில் கடந்திருக்கிறது. இந்தியாவில் 400 கோடிகளை வசூலித்த ஒரு நேரடி இந்திப் படம்கூட இல்லை. 300 கோடிகளை சில படங்கள் தாண்டியிருக்கின்றன. பாகுபலி 2 படத்தின் எட்ட முடியாத 500 கோடி வசூல் சாதனையை கேஜிஎப் சேப்டர் 2 முறியடித்தாலும் ஆச்சரியமில்லை. ராக்கி பாயின் வேகம் அப்படி இருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.