Home /News /entertainment /

விஜய் படங்களுக்கு வரவேற்புள்ள கேரளாவில் பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளியது கே.ஜி.எஃப். 2

விஜய் படங்களுக்கு வரவேற்புள்ள கேரளாவில் பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளியது கே.ஜி.எஃப். 2

பீஸ்ட் - கே.ஜி.எஃப் 2

பீஸ்ட் - கே.ஜி.எஃப் 2

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். மலையாள படங்களை விடவும் விஜய் படங்கள் கூடுதல் வசூலை குவிக்கும்.

விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் கேரளாவில் பீஸ்ட் படத்தை கே.ஜி.எஃப். 2 வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஏப்ரல் 14, 2022 அன்று படம் வெளியாகும் என கே.ஜி.எஃப் 2 படக்குழுவினர் ரிலீசுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்தனர். விஜய்யின் பீஸ்ட் படமும் புத்தாண்டையொட்டி வெளியாக இருந்ததால் இரு படங்களும் மோதும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் கேஜிஎஃப் 2 ரிலீசுக்கு ஒருநாள் முன்பாக ஏப்ரல் 13-ம்தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியானது.

பலவீனமான திரைக்கதையால் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனால் மறுநாள் வெளியாகும் கேஜிஎஃப் 2 மீது சினிமா ரசிகர்களின் பார்வை அதிகம் இருந்தது.

இதையும் படிங்க - பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துடன் மோதப் போகும் தளபதி 66...

ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு கேஜிஎஃப் 2 திருப்தி அடையச் செய்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் பீஸ்ட்டுக்கான திரையரங்குகள் தமிழ்நாட்டிலும் குறைக்கப்பட்டு ராக்கி பாய்க்கு கூடுதல் இடம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். மலையாள படங்களை விடவும் விஜய் படங்கள் கூடுதல் வசூலை குவிக்கும்.

இதையும் படிங்க - விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவியது - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரபல இயக்குநர்

இந்நிலையில் கேரளாவில் பீஸ்டின் வசூலை கேஜிஎஃப் 2 பின்னுக்கு தள்ளியுள்ளது. கேரளாவில் ஒட்டுமொத்தமாக பீஸ்ட் படம் ரூ. 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், கேஜிஎஃப் 2 ரூ. 65 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு படங்களில் பீஸ்ட் திரைப்படம் ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், கேஜிஎஃப் 2 படம் 25 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
Published by:Musthak
First published:

Tags: Beast, KGF 2

அடுத்த செய்தி