ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?

வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?

பாகுபலி 2 - கேஜிஎஃப் 2 - தங்கல்

பாகுபலி 2 - கேஜிஎஃப் 2 - தங்கல்

இந்தி வட்டாரத்தை பொறுத்தளவில் அம்மொழியில் டப் செய்து வெளியிடப்பட்ட பாகுபலி 2 திரைப்படம் ரூ. 510.99 கோடி வசூலை குவித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தி மொழியில் வெளியிடப்பட்ட கே.ஜி.எஃப்.2, அமீர் கானின் தங்கல் பட வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்தியிலேயே உருவாக்கப்பட்ட தங்கலை, டப்பிங் செய்து வெளியிடப்பட்ட கே.ஜி.எஃப் 2 வீழ்த்தியிருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலும், வெற்றி பெறும் ஒரு படத்தின் அடுத்த பாகம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விடும். ஆனால், கே.ஜி.எஃப். 2ம்பாகம், பார்ட் ஒன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை விட பன்மடங்கு ரசிகர்களை திருப்தி அடையச் செய்துள்ளது.

இதனால் வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்திய சினிமாவாக பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படும் பாலிவுட்டில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடன் போட்டியிடுவதை தவிர்த்த அமீர்கான்,  தனது லால் சிங் சத்தா திரைப்பட வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளார். இதேபோன்று பாலிவுட் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் நடித்த ஜெர்ஸி திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கே.ஜி.எஃப். 2 முன்பாக போதுமான வரவேற்பை அந்தப் படம் பெறவில்லை.

இதையும் படிங்க - ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் இணையும் சூர்யா... 

இதேபோன்று அஜய் தேவ்கனின் ரன்வே, டைகர் ஷெரோபின் ஹீரோபான்ட்டி 2 படங்களும் கே.ஜி.எஃப். 2 முன்பு தாக்குப்பிடிக்க முடியாமல் குறைந்த வசூலையே பெற்று வருகின்றன.

இதையும் படிங்க - Happy Birthday Trisha : அடி அழகா சிரிச்ச முகமே! நடிகை த்ரிஷாவின் க்யூட் போட்டோஸ்

இந்தி வட்டாரத்தை பொறுத்தளவில் அம்மொழியில் டப் செய்து வெளியிடப்பட்ட பாகுபலி 2 திரைப்படம் ரூ. 510.99 கோடி வசூலை குவித்து முதலிடத்தை பிடித்துள்ளது. அமீர்கானின் தங்கல் திரைப்படம் ரூ. 374.43 கோடி வசூலைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் அதனை கே.ஜி.எஃப். 2 திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

தற்போது வரை கே.ஜி.எஃப். 2 இந்தி மொழி பதிப்பு ரூ. 382.9 கோடியை வசூலித்தை 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. படம் இன்னும் சில வாரங்களுக்கு ஓடும் என்பதால் பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனையையும் கே.ஜி.எஃப்.2 முறியடிக்கும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

First published:

Tags: KGF 2