Home /News /entertainment /

முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!

முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!

பீஸ்ட் - கே.ஜி.எஃப்

பீஸ்ட் - கே.ஜி.எஃப்

முதல் நாளிலேயே கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

    KGF 2 Box Office Collection Day 1: கே.ஜி.எஃப் 2 திரைப்படம் முதல் நாளிலேயே விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கியுள்ளது.

    நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியானது.

    பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது

    கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.

    முதல் பாகத்தை விட கே.ஜி.எஃப் 2 பிரமாண்டத்தின் உச்சமாக இருப்பதாகக் கூறி, ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி வெளியான விஜய்யின் பீஸ்ட், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    KGF 2 Review: இந்திய உணர்வில் ஒரு சர்வதேச படம்!

    இதற்கிடையே முதல் நாளிலேயே கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இது ஒருபுறமிருக்க, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 70 கோடி வசூல் செய்திருந்தது. இதை வைத்துப் பார்க்கும் போது பீஸ்ட் படத்தின் வசூலை கே.ஜி.எஃப் 2 தட்டி தூக்கியிருப்பது தெரிய வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Beast, KGF 2

    அடுத்த செய்தி