Home /News /entertainment /

கார் விபத்தில் சிக்கிய கே.ஜி.எஃப் 2 வில்லன் நடிகர்

கார் விபத்தில் சிக்கிய கே.ஜி.எஃப் 2 வில்லன் நடிகர்

அவினாஷ்

அவினாஷ்

காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது.

    கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அவினாஷ் விபத்தில் சிக்கியுள்ளார். 

    இயக்குநர் பிரசாந்த் நீலின் இரண்டு பாகங்கள் கொண்ட பிளாக்பஸ்டர் க்ரைம் படமான KGF-ல் கேங்க் லீடராக நடித்து பிரபலமான கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ், புதன்கிழமை காலை பெங்களூரில் கார் விபத்தில் சிக்கினார்.

    ஜிம்மிற்குச் செல்லும் வழியில் அவரது கார், கேன்டர் டிரக் மீது கார் மோதியது. அந்த விபத்திலிருந்து காயமின்றி தப்பித்த அவினாஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by B.s. Avinash (@avinashbs)






     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தீவிர நடன பயிற்சியில் மன்சூர் அலிகான் - கவனம் ஈர்க்கும் வீடியோ!

    ”காலை 6.05 மணியளவில், நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ​​​​அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் உடையும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது” என்று தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பதிவிட்டிருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: KGF 2

    அடுத்த செய்தி