முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளைஞரை மிரட்டி ஆபாச திரைப்படம்... பிரபல பெண் இயக்குநர் அதிரடி கைது... வெளிவந்த பகீர் தகவல்..!

இளைஞரை மிரட்டி ஆபாச திரைப்படம்... பிரபல பெண் இயக்குநர் அதிரடி கைது... வெளிவந்த பகீர் தகவல்..!

பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா

பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா

வெப் தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். அது ஒளிபரப்பானால் என் குடும்ப வாழ்கை கடுமையாக பாதிக்கும் என்று புகாரில் கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான லட்சுமி தீப்தா. இயக்குநரான இவர் ஓடிடி தளங்களில் நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற வெப் தொடர்களை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரீஸ் அனைத்துமே அந்தரங்க காட்சிகளை கொண்ட  18+ வெப் சீரீஸ்கள் ஆகும்.

இந்நிலையில், சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட திருவனந்தபுரத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் லட்சுமி தீப்தாவிடம் வாய்ப்பு தேடி சென்றுள்ளார். இவர்தான் தற்போது இயக்குநர் லட்சுமி தீப்தா மீது பரபரப்பு புகாரை தந்துள்ளார். அந்த புகாரில், நான் வாய்ப்பு தேடி லட்சுமி தீபாவை அனுகினேன். அவர் தன்னை ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறி ஆசை வார்த்தை பேசி, அவர் இயக்கும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். நானும் இந்த வெப்தொடரின் படப்பிடிப்புகளில் பல நாட்கள் கலந்து கொண்டேன்.\

என்னை ஆபாச காட்சியில் நடிக்க வைக்க வற்புறுத்தினார். அதிர்ச்சியடைந்த நான் நடிக்க மறுத்தேன். ஆனால், நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதாக கூறி என்னை மிரட்டி நடிக்க வைத்தனர். அந்த வெப் தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். அது ஒளிபரப்பானால் என் குடும்ப வாழ்கை கடுமையாக பாதிக்கும் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ''சிவனின் திட்டம்.. அப்போ என்ன உள்ளேயே விடல, ஆனா இப்போ....'' - கோவில் விழாவில் உருக்கமாக பேசிய ஷகிலா!

இதையடுத்து இயக்குநர் லட்சுமி தீப்தா மற்றும் ஓடிடி உரிமையாளர் மீது அருவிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே லட்சுமி முன்ஜாமீன் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து லட்சுமி தீப்தாவை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Director, Obscene