• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கேரள மாநில விருதுகளை அள்ளிச் சென்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

கேரள மாநில விருதுகளை அள்ளிச் சென்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

தி கிரேட் இந்தியன் கிச்சன்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இதில் பெரும்பாலான படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படங்கள் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

  • Share this:
    51-வது கேரள திரைப்பட விருதுகள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

    மலையாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதை கேரள அரசு அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான 51-வது கேரள திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டின் இறுதியில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்த ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

    ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான கருவை நேர்த்தியான திரைமொழியில் சொல்லிய இப்படம் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது.



    வெள்ளம் திரைப்படத்தில் மது போதைக்கு அடிமையானவராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கப்பெல்லா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆனா பென் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.



    கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் கவனம் ஈர்த்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் சிறந்த பிரபலமான திரைப்படம், சிறந்த பெண் பின்னணி குரல் மற்றும் சிறந்த பாடகிக்கான சிறப்பு விருது உட்பட மூன்று விருதுகளை வென்று அசத்தியுள்ளது.



    இசையை மையப்படுத்தி வெளிவந்த சூஃபியும் சுஜாதையும் திரைப்படம் சிறந்த இசை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பின்னணி பாடகி, சிறந்த ஒலிக்கலவை மற்றும் சிறந்த நடனம் என இசைக்கான பிரிவில் 5 முக்கிய விருதுகளை வென்று குவித்துள்ளது.



    தொழில்நுட்பப் பிரிவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை kayattam படமும் சிறந்த படத்தொகுப்புக்கான விருதை சி யு சூன் படமும் சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை மாலிக் படமும் கைப்பற்றியுள்ளன. மேலும் என்னிவர் திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் சிவா சிறந்த இயக்குனராகவும் கப்பெல்லா படத்தை இயக்கிய முகமது முஸ்தபா சிறந்த அறிமுக இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



    கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி பல்வேறு பிரிவுகளில் 80 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான தேர்வு குழுவினர் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் இதில் பெரும்பாலான படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படங்கள் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: