இது போலீசாரின் குக்கூ... குக்கூ... வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி

இது போலீசாரின் குக்கூ... குக்கூ... வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி

போலீஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த என்ஜாய் எஞ்சாமி பாடலை போலீசார் கையிலெடுத்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள் கையிலெடுத்துள்ளன.

இந்நிலையில் கேரள போலீசார் சற்று வித்தியாசமான முறையில் மக்களிடம் பிரபலமான என்ஜாய் எஞ்சாமி பாடல் ஸ்டைலில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் காவல்துறையினரே நடனமாடியும் அசத்தியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.



ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன பாடலை பாடியுள்ளார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இயற்கை வளம், கலாசார வேர்களை போற்றும் இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: