Home /News /entertainment /

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு... முன்னணி நடிகரிடம் போலீசார் 11 மணி நேரம் விசாரணை

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு... முன்னணி நடிகரிடம் போலீசார் 11 மணி நேரம் விசாரணை

ஜாமீனில் வெளிவந்த பின்னர், தன்னை கைது செய்த போலீசாரை பழிவாங்குவதற்கு திலீப் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜாமீனில் வெளிவந்த பின்னர், தன்னை கைது செய்த போலீசாரை பழிவாங்குவதற்கு திலீப் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜாமீனில் வெளிவந்த பின்னர், தன்னை கைது செய்த போலீசாரை பழிவாங்குவதற்கு திலீப் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    முன்னணி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் திலீப்பிடம் அதிகாரிகள் 11 மணிநேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க : விஜய் டிவி போட்ட குறும்படம்.. பொய் என அடித்து பேசும் பிக் பாஸ் பாவ்னி!

    மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்துது வரும் திலீப், 2017-ல் பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக விசாரணையில் உணர்ந்த போலீசார், பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் திலீப் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    சம்பவம் நடந்த 6 மாதங்களுக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே திலீப்பின் நண்பர் பாலச்சந்திர குமார் தற்போது புதிய தகவல்களை அளித்துள்ளார். இவை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க :  பிக் பாஸ் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்? வெளிப்படையாக கூறிய சஞ்சீவ் வெங்கட்!

    இதன்படி, ஜாமீனில் வெளிவந்த பின்னர், தன்னை கைது செய்த போலீசாரை பழிவாங்குவதற்கு திலீப் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பாலச்சந்திர குமாரும் அந்த ஆலோசனையில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் நடந்த உரையாடல்களை பால சந்திர குமார் பதிவு செய்து வைத்துள்ளார். இதன் அடிப்படையில் திலீப் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திலீப் முன் ஜாமின் பெற்றதால் கைதில் இருந்து தப்பினார். அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் ஆவணங்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

    இதனை விசாரித்த நீதிபதி, திலீப்பை போலீசார் ஜனவரி 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் 8 மணி வரை விசாரிப்பதற்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில் நேற்று அவரிடம் 11 மணிநேரமாக போலீசார் தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றைக்கும் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

    திலீப்பை பொருத்தவரை அவருக்கு கேரளாவில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த அவர் மீது, தற்போது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அவரது இமேஜை பாதித்துள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor, Kerala

    அடுத்த செய்தி