ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கேரளாவில் படவிழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு தடை… ரசிகர்கள் கடும் எதிர்ப்பு…

கேரளாவில் படவிழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு தடை… ரசிகர்கள் கடும் எதிர்ப்பு…

நடிகை ஷகிலா

நடிகை ஷகிலா

விழா நடைபெறவிருந்த வணிக வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்றவர்களிடம் ரசிகர்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கேரளாவில் படவிழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஷகிலா ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  மலையாளத்தில் வெளிவந்த ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் இந்திய அளவில் ஹிட்டானது. இந்த படத்தை ஓமர் லுலு இயக்கியிருந்தார்.இவர் தற்போது நல்ல சமயம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

  இந்நிலையில், நல்ல சமயம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று முன் முன்தினம் நடைபெறவிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்கு நடிகை ஷகிலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

  நல்ல சமயம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வணிக வளாகத்தில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில் நடிகை ஷகிலா பங்கேற்பதாக இருந்தால் அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று வணிக வளாக நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்தனர்.

  பார்ட்டி வியரில் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

  இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி ஷகிலா அளித்த பேட்டியில் தனக்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதியது கிடையாது. எதற்காக அனுமதி மறுக்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

  இதற்கு வணிக வளாகத்தினர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஷகிலாவிடம் நாங்கள் பாகுபாடு ஏதும் காட்டவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சிக்கு நாங்கள் அனுமதி மறுக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுத்தோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

  ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவிருந்த இதே வணிக வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பாக சினிமா நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்றவர்களிடம் ரசிகர்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வணிக வளாக நிர்வாகிகளை போலீசார் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் ஷகிலா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் தொகுப்பாளினி கிகி..!

  நடிக்க வந்த புதிதில் ஆபாச படங்களில் ஷகிலா நடித்து வந்தார். இவரது படங்களுக்கு மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன் லால் படங்களுக்கு இணையாக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kerala, Mollywood