மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா - கார்த்தி

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 50-க்கும் அதிகமானோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா - கார்த்தி
சூர்யா - கார்த்தி
  • News18
  • Last Updated: August 15, 2019, 2:18 PM IST
  • Share this:
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 8-ஆம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 50-க்கும் அதிகமானோரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


வயநாடு மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கர்நாடகாவிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் பேலகாவி மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை கர்நாடகத்தில் கனமழையினால் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் நிலைகுலைந்திருக்கும் கேரளா, கர்நாடக  மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி இணைந்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.


கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த கேரளா தற்போது மீண்டும் தண்ணீரால் தத்தளித்து வருகிறது. இதனால் கேரள மக்களுக்கு உதவி தேவை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறித்த காதல் ஜோடி

First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading