Home /News /entertainment /

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழா: பெரும் வரவேற்பை பெற்ற நடிகை பாவனா பங்கேற்பு!

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழா: பெரும் வரவேற்பை பெற்ற நடிகை பாவனா பங்கேற்பு!

மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார்.

மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார்.

மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார்.

    கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவை முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் 7 நாள்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

    இதன் தொடக்க விழாவில் நடிகை பாவனா பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாவனா வருவதாக நிகழ்வுப் பட்டியலில் வெளியிடப்படாத நிலையில், அவர் திடீரென விழா மேடைக்கு வருகை தந்தார்.

    பாவனாவை "symbol of fight" என தயாரிப்பாளர் ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் பாவனாவை வரவேற்றனர்.

    இதையும் படிங்க - நடிகர் சங்க தேர்தல் முடிவு: விஷால் அணியா? ஐசரி கணேஷ் அணியா.. வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

    மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார். கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) "கேரளாவின் ரோல் மாடல் என பாவனாவுக்கு புகழாரம் சூட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பாவனா, கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.

    பாவனா நிகழ்வில் கலந்து கொண்ட காணொலியைப் பகிர்ந்து நடிகை பார்வதி மேனன், "வெல்கம் பேக் பாவனா எனப் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க - பிரதமருக்கு சவால்விட்ட பிரபல இயக்குனர்!

    5 ஆண்டுகளுக்கு பின்னர் ந்திக்கக்கக்கொரு பிரேமொண்டர்ன் ''(‘Ntikkakkakkoru Premondarnn)'' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் அவர் கடைசியாக 2017ல் வெளிவந்த 'Adam Joan' என்ற படத்தில் நடித்திருந்தார்.

    துருக்கியின் இஸ்தான்புல் நகரில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் இரண்டு கால்களையும் இழந்த லிசா காலன் இயக்கிய The Tongue of Mountains என்ற குறும்படத்திற்கு Spirit of Cinema விருது அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kerala

    அடுத்த செய்தி