நடிகர் பிரித்விராஜின் புதிய படத்துக்கு கேரள இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பாசில் ஜோசப் முதன்முறையாக, 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'குருவாயூர் அம்பல நடையில்' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு குஞ்சிராமாயணம் புகழ் தீபு பிரதீப் திரைக்கதை எழுதுகிறார். சமூக வலைதளங்களில் இதனை அறிவித்த பிரித்விராஜ், இது ஒரு முழு ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார்.
Wishing all of you a laughter filled 2023! Teaming up with the the multi-talented Basil Joseph, directed by Vipin Das, written by Deepu Pradeep and joining hands with my long time associates E4 Entertainment, presenting
“GURUVAYOOR AMBALANADAYIL”
😊@PrithvirajProd @E4Emovies pic.twitter.com/3CvP0ymICm
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 1, 2023
சாலையோர மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்!
பிருத்விராஜ் மற்றும் பாசில் இருவரும் பல படங்களில் நடித்து வருவதால், குருவாயூர் அம்பல நடையில் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குருவாயூர் அம்பல நடையில் என தெய்வத்தின் பெயரால் இப்படம் இயக்கப்படுவதால் இதற்கு கேரள இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”குருவாயூரப்பன் தெய்வத்தின் பெயரை படத்துக்கு வைத்து கதையை திரித்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது நடக்காது. பெயரை மாற்ற வேண்டும்” என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Malayalam actor