Home /News /entertainment /

பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு மலையாள சினிமாவில் கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி!

பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு மலையாள சினிமாவில் கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி!

WCC

WCC

திரைப்பட நிறுவனங்கள் தவிர, ஊடக நிறுவனங்களும் போஷ் சட்டத்தின்படி ஐசி-களை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம் 2013-ன் படி மலையாள திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளக குழுவை (IC - Internal Committee) அமைக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 17) தெரிவித்துள்ளது.

    மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (AMMA) மற்றும் கேரளாவின் திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFKA) போன்ற பிற அமைப்புகளில் குறை தீர்க்கும் முறையை நிறுவ வேண்டும் என்று கோரியிருந்த விமன் இன் சினிமா கலெக்டிவ் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு பிறகு வந்தது.

    IC-யை அமைக்க மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பிற சினிமா நிறுவனங்களும் கட்டாயமாக ஐசி-யை வைத்திருக்க வேண்டும் என்றும் பெஞ்ச் கூறியது. தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இத்தீர்ப்பை நீதிமன்றத்தில் வாசித்தது.

    James: புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் வெளியீடு... வரி விலக்கு கோரும் காங்கிரஸ்!

    2017-ஆம் ஆண்டு நடிகர் திலீப் மீது குற்றம் சாட்டப்பட்ட, நடிகை தாக்கப்பட்ட வழக்கை அடுத்து வுமன் இன் சினிமா கலெக்டிவ் (The Women in Cinema Collective) உருவாக்கப்பட்டது. மலையாள சினிமாவில் பாலின வேறுபாடுகளுக்கு எதிராக போராடுவோம் என்று இந்த WCC தெளிவுபடுத்தியது. இதன் ஒரு பகுதியாக, மலையாள திரைப்பட நிறுவனங்களில் போஷ் (POSH) சட்டத்தின்படி உள்கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று 2018 அக்டோபரில் அந்த அமைப்பு நீதிமன்றத்துக்குச் சென்றது.

    காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

    வியாழக்கிழமை வாசிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில், திரைப்பட நிறுவனங்கள் தவிர, ஊடக நிறுவனங்களும் போஷ் சட்டத்தின்படி ஐசி-களை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக கமிட்டி அமைப்பதை எதிர்த்து வந்த மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (AMMA), கடந்த வாரம் மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு, குழு அமைக்க முடிவு செய்தது. இருப்பினும், இந்த ஐசி-க்கு தேவையான வெளிப்புற உறுப்பினர் இதில் இல்லை, ஆகையால் இது பின்னர் சரி செய்யப்படும் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Malayalam actor

    அடுத்த செய்தி